CINEMA
“பெர்லின் டூ ராஜாக்கூர்” – நடிகர் சூரி பெருமிதம்…. வைரலாகும் எக்ஸ் பதிவு…!!

அறிமுக இயக்குனர் பி.எஸ் வினோத் ராஜ் அடுத்ததாக கொட்டுக்காளி படத்தை இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படம் 23ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டிரைலரானது சமீபத்தில் வெளியான நிலையில் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சினிமாப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
இந்நிலையில் நடிகர் சூரி எக்ஸ் பதிவில், உலகின் தலைச்சிறந்த பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ் படம் என்ற பெருமையை கொண்ட #கொட்டுக்காளிக்கு எங்க ராஜாக்கூர் மக்களின் மரியாதை. மதுரை மண்ணின் கதையில் அதன் அசல் மனிதர்களையே நடிக்க வைத்து, உலக நாடுகளின் திரைப்பட விழாக்களில் அந்த ஊர் மக்களை பிரமிக்க வைத்த கொட்டுக்காளி, நம் சொந்த மண்ணின் மக்களின் ஆசி கோரி வந்த தருணம்..! எந்த ஒரு விழாவிற்கும் விருதுக்கும் இணையான தருணம் இது.! இறைவனுக்கும் ராஜாக்கூர் மக்களுக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.
பெர்லின் டூ ராஜாக்கூர்
உலகின் தலைச்சிறந்த பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ் படம் என்ற பெருமையை கொண்ட #கொட்டுக்காளி க்கு எங்க ராஜாக்கூர் மக்களின் மரியாதை!
மதுரை மண்ணின் கதையில் அதன் அசல் மனிதர்களையே நடிக்க வைத்து, உலக நாடுகளின் திரைப்பட விழாக்களில்… pic.twitter.com/GZWjiuUfYA
— Actor Soori (@sooriofficial) August 18, 2024