“எங்களுக்குக் பாடம் எடுக்காதீங்க… முதல்ல கோயில் திருட்டுக்குப் பதில் சொல்லுங்க..!” பாஜகவின் ‘கலாச்சார’ சாடலுக்கு… நானா படோலே கொடுத்த நறுக் பதிலடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எங்களுக்குக் பாடம் எடுக்காதீங்க… முதல்ல கோயில் திருட்டுக்குப் பதில் சொல்லுங்க..!” பாஜகவின் ‘கலாச்சார’ சாடலுக்கு… நானா படோலே கொடுத்த நறுக் பதிலடி..!!

Published

on

மகாராஷ்டிராவில் குரு பூர்ணிமா வழிபாட்டின் போது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நானா படோலேவின் கால்களை இருவர் கழுவி பூஜை செய்யும் வீடியோ வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் சோபாவில் அமர்ந்திருக்கும் படோலேவின் கால்களை இருவர் கழுவி, பூக்களைத் தூவி, பழங்களை வைத்து வழிபாடு செய்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை அடுத்து, காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரத்தையே இது காட்டுகிறது என பாஜக தலைவர்கள் மற்றும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த விவகாரத்திற்குப் பதிலளித்த மகாராஷ்டிர வருவாய்த்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான சந்திரசேகர் பாவன்குலே, “இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவது காங்கிரஸ் தலைவர்களின் கலாச்சாரம். இதுபோன்ற சம்பவங்களில் இருந்து அவர்கள் பாடம் கற்றுக்கொண்டிருக்க வேண்டும். விமர்சனத்தையும் எதிர்மறைப் புகழையும் மட்டுமே தரக்கூடிய இதுபோன்ற பழக்கவழக்கங்களில் ஏன் ஈடுபட வேண்டும்?” என்று காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

பாஜகவின் இந்த விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்துள்ள நானா படோலே, தான் யாரையும் அப்படிச் செய்யும்படி வற்புறுத்தவில்லை என்றும், தனது விரிவடைந்த குடும்பத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் தன்னை ‘குருவாக’க் கருதி விருப்பத்துடன் மரியாதை நிமித்தமாகவே இதைச் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பாஜகவை விமர்சித்த அவர், “அயோத்தி ராமர் கோவில் நன்கொடை நிதியைக் கொள்ளையடித்தவர்களுக்கு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பற்றி எங்களுக்குப் போதிக்க எந்த உரிமையும் இல்லை” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in