Uncategorized
‘அழகிய தம்பதிகளுக்கு பிறந்த குழந்தை’.. ஆணா..? பெண்ணா…? ‘வாழ்த்தி வரும் பிரபலங்கள் தெரியுமா’..?

சன் மியூசிக் சேனலில் ஆங்காரக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளர். அதனை தொடர்ந்து வெள்ளித்திரையில் நடிகராக உயர்ந்துள்ளவர் தான் ரியோ ராஜ்.
சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானதால் தற்போது படவாய்ப்பு கிடைத்தால் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாக காலடி வைத்துள்ளார். இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார். இதனைத்தொடர்ந்து இயக்குனர் பத்ரி இயக்கத்தில் உருவாகஇருக்கும் ப்ளான் பண்ணி பண்ணனும் என்கிற படத்தில் நடித்துள்ளார்.
கர்ப்பமாக இருந்த ரியோவின் மனைவி ஸ்ருதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை ரியோ நெகிழ்ச்சியாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
எனது உலகை ஆள மகாராணி வந்துவிட்டாள். எனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. எனது மனைவியும் , மகளும் நல்ல முறையில் இருக்கிறார்கள். என பதிவு செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு இணையத்தில் வாழ்த்து மழை பெய்து வருகிறது.