எந்த ஊராக இருந்தாலும்’… பிளைட்’ புடிச்சு போய் எங்கள் தொழிலை.. செய்வோம்..! “கோவையில் வசமாக சிக்கிய”.. சகோதிரிகள்..? – cinefeeds
Connect with us

Uncategorized

எந்த ஊராக இருந்தாலும்’… பிளைட்’ புடிச்சு போய் எங்கள் தொழிலை.. செய்வோம்..! “கோவையில் வசமாக சிக்கிய”.. சகோதிரிகள்..?

Published

on

கோயம்புத்தூர் கோனியம்மன் கோயில் திருவிழா கடந்த நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. அம்மன் தேர் கிளம்பும் போது அங்கு கூடியிருந்த பெண்களிடம் இருந்து சுமார் 35 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் தேர் சென்ற வழியில் இருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

வீடியோவில் மூன்று பெண்கள் சுற்றிச்சுற்றி வந்து நகை பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதை வைத்து செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் கண்டுபிடிக்க பட்டது. அதில் திருச்சூரை சேர்ந்த இந்துமதி(27), இலங்கையை சேர்ந்த பராசக்தி(36) லண்டனை சேர்ந்த செல்வி(36) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 20 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.

Advertisement

மேலும் விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், அப்போது அவர்கள் கூறுகையில், ” நாங்கள் மூவரும் அக்கா, தங்கைகள் முறை. பல வருடமாக இந்த திருட்டு தொழிலை செய்து வருகிறோம். இணையத்தில் இந்தியா முழுவதும் எங்கு திருவிழா நடைபெறுகிறது என்று பார்ப்போம். பின்னர் பிளைட் பிடித்து அந்த இடத்திற்கு சென்று அங்கு, பின்னர் திருவிழா நடைபெறும்போது கூட்டத்திற்குள் புகுந்து நகைகளை திருடி மூவாறும் பிரித்து கொண்டு, அவரவர்கள் வீட்டிற்கு சென்று விடுவோம்.

இதை தான் எங்கள் வாடிக்கையாக வைத்துள்ளோம். இந்தியா முழுவதும் கூட்டத்திற்குள் புகுந்து எங்கள் கைவரிசையை காட்டி இருக்கிறோம். கடந்த மாதம் நடைபெற்ற தஞ்சாவூர் கோயிலிலும் கூட்டத்திற்குள் புகுந்து நகைகளை திருடினோம். தற்போது கோயம்புத்தூர் கோனியம்மன் திருவிழாவில் திருடிய போது மாட்டிக்கொண்டோம்,” தற்போது இவர்களின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்த போலீசார் அவர்களின் பாஸ்போர்ட்டை முடக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in