TRENDING
பெண்களின் உள்ளாடைகள் மட்டும் காணாமல் போகிறது இரவு நேரத்தில் … நைட்டி , டாப்ஸ் , கொலுசு அணிந்து கொண்டு இரவில் உலாவும் மர்ம நபர்.. வினோத செயல் …
பெண்களின் உள்ளாடையை மட்டும் திருடி செல்லும் வினோத திருடன்.
கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள மீனாட்சி குடியிருப்புபகுதியில் திட்ட திட்ட 245 வீடுகள் உள்ளன . அந்த குடியிருப்புகளில் இரவு நேரத்தில் வெளிய கொடியில் காயவைக்கும் துணிகளில் பெண்களின் உள்ளாடை மற்றும் காலணிகள் திருடுபோய் இருந்தது அதிகாலை பார்க்கும் பொழுது . இப்படியே சில நாட்கள் அங்கு இருக்கும் பல வீடுகளில் திருட்டு சம்பவம் நடந்தது .
அப்பொழுது அந்த குடியிருப்பில் ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தில் வீடு ஒன்று காலியாக உள்ளது . அந்த வீட்டில் காணாமல் போன பெண்களின் உள்ளாடைகள் மற்றும் காலணிகள் அடுக்கி வைத்து இருப்பதை கண்ட குடியிருப்பு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அங்கு சில வீடுகளில் பொருத்தப்பட்டு இருக்கும் கண்காணிப்பு கேமராவை பரிசோதனை செய்ததில் இரவு நேரத்தில் நபர் ஒருவர் பெண்களின் நைட்டி , டாப்ஸ் , கொலுசு மற்றும் சுடிதார் அணிந்து கொண்டு ஒரு மர்ம நபர் பெண்களின் உள்ளாடையை திருடுவது கண்டு பிடிக்க பட்டது .
இதனால் அச்சம் அடைந்த குடியிருப்பு மக்கள் அவர்கள் பாதி பாதியாக பிரிந்து இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்படி இருந்தும் கடந்த நான்கு நாட்களாக மீண்டும் திருட்டு நடந்து இருக்கிறது. அதனால் அச்சத்தில் உள்ள குடியிருப்பின் அந்த சைக்கோ திருடனை பற்றி போலீசில் புகார் கொடுத்தனர். தற்பொழுது அந்த திருடனை தேடும் பணியில் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
