LATEST NEWS
லூசு மாதிரி பேசாதீங்க….! தனலட்சுமி வெளுத்து கட்டிய விஜே மகேஸ்வரி….! பத்தல….! பத்தல….! I WANT MORE….!!!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது கோளாகலமாக தொடங்கியுள்ளது. ஏற்கனவே 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்த பிக் பாஸ் தற்போது ஆறாவது சீசனை அக்டோபர் ஒன்பதாம் தேதி மாலை துவங்கியுள்ளது. வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்து பார்வையாளர்களை கவர்ந்து இழுத்து வருகிறார் ஜி பி முத்து. யூடியூப் மூலம் பிரபலமான இவருக்கு தொடர்ந்து ஆதரவு பெரிய வருகின்றது.
ஆரம்பத்தில் சற்று சுமாராக சென்று கொண்டிருந்த நிகழ்ச்சி தற்போது தான் சண்டையுடன் ஆரவாரமாக துவங்கியுள்ளது. இதை பார்த்து பார்வையாளர்கள் இந்த ஆரம்பிச்சுட்டாங்களே சண்டைய… என்று கூறி வருகிறார்கள். இன்று வெளியான முதல் பிரமோவில் ஆயிஷா அழுத நிலையில் இரண்டாவது பிரமோவில் விஜே மகேஸ்வரி, தனலட்சுமி இருவரும் சண்டையிட்டு கொள்கின்றனர்.
கஷ்டப்பட்டு சமைத்துக் கொண்டிருக்கிறோம். சாம்பாரா ஏன் இப்ப வைக்கிறீங்க லூசு மாதிரி கேள்வி கேக்குறாங்க என்று விஜய் விஜே மகேஸ்வரி கடுமையாக பேசியுள்ளார். இதைக் கேட்ட தனலட்சுமி லூசு மாதிரி நீங்க பேசாதீங்க என்று பதில் அளிக்கிறார். கேள்வி கேட்கணும் என கேள்வி கேட்டால் எப்படி பதில் கூறுவது என்று தொடர்ந்து சண்டை போட்டு வருகிறார் மகேஸ்வரி.
நீங்க எப்ப வேண்டுமானாலும் செய்றதை எல்லாம் சாப்பிட முடியாது என்று தனலட்சுமி கூற மகேஸ்வரிக்கு கோபம் வருகிறது. அது எங்க இஷ்டம். இது பிக் பாஸ் ஹவுஸ், இது அனைவருக்கும் பொது. இங்கு என்ன வசதி இருக்கிறதோ அதைத்தான் செய்ய முடியும். நீங்க அதைத்தான் சாப்பிடணும் என்று ஒரே போடாக போட்டு தனலட்சுமி ஆப் செய்து விட்டார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் என்ன சப்பையா முடிச்சுட்டாங்க…. நாங்க இன்னும் எதிர்பார்த்தோமே என்று கூறி வருகின்றனர்.