CINEMA
செம டிரெண்டிங்கில் “வாட்டர் பாக்கெட்” பாடல்…. 27 மில்லியன் வியூஸ் கடந்தது…!!

நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருந்தால் திரைப்படம் ராயன் .இந்த படம் ஜூலை 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இதில் நடிகர் தனுஷிற்கு இரண்டு தம்பிகளும், ஒரு தங்கையும் இருப்பார்கள். இவர்கள் மூன்று பேரையும் சிறுவயதிலிருந்தே நடிகர் தனுஷ் வேலை செய்து காப்பாற்றி வருவார். இதற்கிடையில் ஏற்படும் பிரச்சனைகளை வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் “உசுரே நீதானே” என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் மிகப் பிரபலமானது. அதேபோன்று இந்த படத்தின் வாட்டர் பாக்கெட் பாடலும் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில் தற்போது இந்த வீடியோ பாடல் youtubeபில் வெளியானது. யூடியூப் தளத்தில் ரிலீஸான 12 நாட்களுக்குள்ளாக 27 மில்லியன் viewsகளைக் கடந்துள்ளது. A.R ரகுமான் இசையில் கானா காதர் எழுதிய இந்த பாடலை சந்தோஷ் நாராயணன் & ஸ்வேதா மோகன் இணைந்து பாடியிருந்தனர். தியேட்டர்களில் குத்தாட்டம் போட வைத்த இந்த பாடலை பலரும் ரீல்ஸ் ஆக செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.