LATEST NEWS
அடடே இவரா?…. பிரபல நடிகருடன் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி…. அந்த ஹீரோ யார் தெரியுமா….????
உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமான படைப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் ஐஸ்வர்யா லட்சுமி.மலையாள நடிகையான இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆக்சன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்தத் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாககவர்ந்த நிலையில் இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன.
அதன் பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.அதேசமயம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாய்பல்லவி நடிப்பில் வெளியான கார்கி திரைப்படத்தில் பத்திரிக்கையாளராக ஐஸ்வர்யா லட்சுமி நடித்து அசத்தியிருந்தார். அதே சமயம் அந்த திரைப்படத்தை அவர் தயாரித்தும் இருந்தார். இதனைத் தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சமுத்திரகுமாரி பூங்குழலியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.
இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான கட்டாகுஸ்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் கைதி,மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற திரைப்படங்களில் நடித்த நடிகை அர்ஜுன் தாசு உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை ஐஸ்வர்யா லட்சுமி வெளியிட்டுள்ளார். ஹார்டின் ஸ்மைலி பகிர்ந்து தங்களின் காதலை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தொடர்ந்து அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
