தூக்க மாத்திரை கொடுத்து கழுத்தை அறுத்த மனைவி…! உடலை துண்டு துண்டாக வெட்டி வீடியோ எடுத்து ரசித்த கொடூரம்…. சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தூக்க மாத்திரை கொடுத்து கழுத்தை அறுத்த மனைவி…! உடலை துண்டு துண்டாக வெட்டி வீடியோ எடுத்து ரசித்த கொடூரம்…. சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

Published

on

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில் கடந்த ஜூன் 5-ஆம் தேதி கை, கால்கள் மற்றும் தலை இல்லாத ஒரு ஆணின் உடல் சூட்கேசில் கண்டெடுக்கப்பட்ட கொடூரக் கொலை வழக்கின் மர்மத்தை ஓட்டேரி போலீசார் துலக்கியுள்ளனர். உயிரிழந்தவர் தேனாம்பேட்டையைச் சேர்ந்த அமீர் அலி என்பதும், அவரது நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அவரது இரண்டாவது மனைவி ரோகிமா (36) மற்றும் அவரது கள்ளக்காதலன் அஷ்ரப் ஆகியோர் இணைந்து இக்கொலையைச் செய்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

கடந்த ஜூன் 3 அன்று அமீர் அலிக்கு உணவில் தூக்க மாத்திரை கொடுத்து, அவர் மயங்கிய பின் அரிவாள்மனையால் கழுத்தை அறுத்து, உடலைத் துண்டு துண்டாக வெட்டியுள்ளனர். உடற்பகுதியை மட்டும் சூட்கேசில் அடைத்து ரயில் நிலையத்திலும், கை மற்றும் கால்களைக் கால்வாயிலும் வீசியதோடு, வெட்டப்பட்ட தலையைச் செங்கல்பட்டில் புதைத்துள்ளனர். துணியில் இருந்த பார்கோடு மற்றும் செல்போன் சிக்னல் உதவியுடன் போலீசார் ரோகிமாவையும், அவரது கள்ளக்காதலனையும் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

Advertisement

இந்த விசாரணையில் போலீசாரையே உரைய வைக்கும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. கணவனின் உடலைத் துண்டு துண்டாக வெட்டும் கொடூரக் காட்சிகளை ரோகிமா தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்ததோடு, சடலத்தின் அருகே நின்று சிரித்தபடி விதவிதமாகச் செல்பீ படங்களையும் எடுத்துள்ளார்.

இந்த பயங்கர வீடியோக்களை அந்த கள்ளக்காதல் ஜோடி மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்துக் கொண்டாடியது போலீசாரைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இக்கொலையை மறைப்பதற்காக அமீர் அலியின் முகநூல் பக்கத்தில் நுழைந்த ரோகிமா, “எனக்கு வாழப் பிடிக்கவில்லை, என்னைத் தேட வேண்டாம்” என இந்தி மொழியில் அவரே எழுதியது போலப் பதிவிட்டு நாடகமாடியுள்ளார். தற்போது செங்கல்பட்டில் புதைக்கப்பட்டிருந்த தலையை மீட்ட போலீசார், இருவரையும் சிறையில் அடைத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in