VIDEOS
கையில் தங்க காஃபியுடன்…. துபாயில் அமீர் – பாவணி ஜோடியை டார்ச்சர் செய்த விஜே பிரியங்கா…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!

விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளினியாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் பிரியங்கா. தற்போது சூப்பர் சிங்கர் ஆங்கராக இருக்கும் பிரியங்கா சமீபத்தில் தனது கேரியரில் 10 ஆண்டுகளை நிறைவு செய்திருந்தார். அதனை பலரும் ஒன்றாக கூடி கேக் வெட்டி கொண்டாடினர்.சின்னத்திரையில் பிரியங்காவிற்கு தனி ஒரு பெயரும் புகழும் உள்ளது.இன்னும் சொல்லப்போனால் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது என்று கூறலாம்.விஜய் டிவி டிடிக்கு பிறகு அனைவருக்கும் பிடித்தமான ஆங்கர் ஆக இருப்பவர் பிரியங்கா தான்.
விஜய் டிவியில் தொகுப்பாளினியாக கலக்கி வந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று பங்கேற்ற நிலையில் இவர் பற்றி சில நெகடிவ் கமெண்ட் களும் வந்தன.ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அதை சரி செய்து கொண்டு தன்னுடைய பெயரை கெட்டு விடாமல் பார்த்துக் கொண்டார் பிரியங்கா.தற்போது விஜய் டிவியில் தொடர்ந்து தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அடிக்கடி வெளிநாட்டிற்குச் சென்று ஊர் சுற்றி வரும் பிரியங்கா தற்போது துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக அமீர் மற்றும் பாவனை ஜோடியுடன் சேர்ந்து சென்றுள்ளார். அங்கு பிரியங்கா தங்க காபி குடித்த வீடியோவை பகிர்ந்து தங்கத்தில் ஜொலிக்க போகிறேன் என்று கூறி பாவணியை டார்ச்சர் செய்த வீடியோவை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.