LATEST NEWS
எப்படித்தான் பொது இடத்துல இவ்வளவு தைரியம் வருதோ..? டெல்லி மெட்ரோவுக்குள் இளம்பெண் செய்த காரியம்… “இது உடம்புல வர்ற வைப்ரேஷன்”கழுவி ஊற்றும் இணையவாசிகள்..!!
டெல்லி மெட்ரோ இரயில் பெட்டிக்குள் சிவப்பு நிற லஹங்கா ஆடை அணிந்த இளம் பெண் ஒருவர், சக பயணிகளைப் பற்றிச் சற்றும் கவலைப்படாமல் ‘தீவானி மை தீவானி’ என்ற பாலிவுட் பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ள சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தையும் பரப்பபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மெட்ரோவில் பயணிப்பதை விட பலரும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுப்பதையே தங்களது முழுநேர வேலையாகக் கொண்டுள்ளனர் என்பதற்குச் சான்றாக இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.
திவ்யான்ஷி என்ற இன்ஸ்டாகிராம் பிரபலம் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த மெட்ரோ இரயில் பெட்டியின் முழு இடத்தையும் பயன்படுத்தி, பாட்டிற்குச் சம்பந்தமில்லாமல் அவர் துள்ளிக் குதித்துச் செய்த வினோதமான நடன அசைவுகள் பார்ப்பவர்களை அதிர்ச்சியிலும் சிரிப்பிலும் ஆழ்த்தியுள்ளது. பதிவேற்றப்பட்ட சில நாட்களிலேயே ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோ, நெட்டிசன்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.
பொது இடங்களான மெட்ரோ போன்ற போக்குவரத்து வாகனங்களில் மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடனமாடுவதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள், “இது நடனம் அல்ல, ஏதோ உடம்பில் ஏற்படும் அதிர்வு போல உள்ளது” என்றும், “இப்படியெல்லாம் நடுரோட்டிலும் பொது இடத்திலும் ஆட எப்படித்தான் இவ்வளவு தைரியம் வருகிறதோ?” என்றும் காரசாரமாகக் கமெண்ட் செய்து கலாய்த்து வருகின்றனர்.
