LATEST NEWS
தந்தையுடன் சண்டையிட்டு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய வனிதா..!! லாக்டவுனில் அடித்த அதிர்ஷ்டம்..!! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 பரபரப்புடனும், பல்வேறு சர்ச்சைகளுடன் நடந்து முடிந்தது. மற்ற இரண்டு சீசன்களை காட்டிலும் இந்த சீசன் போட்டியாளர்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது என்றே சொல்லலாம். இருந்தாலும் வனிதா மீரா போன்றோர் பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தினர். அதிகமாக சர்ச்சைகளை ஏற்படுத்தியது வனிதா தான்.
இவர் சொந்த வாழ்க்கையிலும் பல கஷ்டங்களை அனுபவித்து வந்த நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் ஆரம்பத்தில் எல்லாருக்கும் எதிரியாகவே காணப்பட்டார். அதுமட்டுமின்றி பார்வையாளர்களும் இவர் மீது வெறுப்பாகவே இருந்தனர். அதன் பின்பு அவரது மகள்கள் உள்ளே வந்த தருணத்தில் அவரது தாய் பாசத்தினை அவதானித்த பார்வையாளர்கள் வனிதாவைக் கொண்டாட ஆரம்பித்தனர். நடிகையான இவர் தனது குடும்ப பிரச்சினை காரணமாக சினிமாவில் வெளிவந்துவிட்டார். நட்சத்திர தம்பதிகளாக மஞ்சுளா, விஜயகுமாரின் மகள் தான் வனிதா. சொத்து தகராறு காரணமாக இவரது தந்தையுடன் சண்டையிட்டு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு சில சீரியல்களில் நடித்து வருகின்றார். சமூகவலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார். யூடியூபிலும் வனிதா விஜயகுமார் என்கிற பெயரில் சேனல் ஒன்றை ஆரம்பித்திருந்தார். அவர் சமையலில் கைத்தேர்ந்தவர் என்பது பிக்பாஸிலேயே நிரூபித்தார். மார்ச் 20 தேதி தொடங்கிய சேனல் தற்போது 2 லட்சம் பயனாளர்களைக் கடந்துள்ளது. லக்டவுனில் புதிய சமயல்களை சமைத்து அசத்தி கொண்டிருக்கிறார். அவருக்கு ரசிகர்களின் ஆதரவு குவிந்து வருகின்றது. அவரது யூடுப் பக்கத்தின் வீடியோ பதிவு இதோ