இந்த புகைப்படத்தில் இருக்கும் குட்டி பாபா யாருனு தெரியுதா..? – சினிமாவில் தற்போது பிரபல நடிகையாக உள்ளார்.. – cinefeeds
Connect with us

Uncategorized

இந்த புகைப்படத்தில் இருக்கும் குட்டி பாபா யாருனு தெரியுதா..? – சினிமாவில் தற்போது பிரபல நடிகையாக உள்ளார்..

Published

on

சினிமாவில் முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது நாயகியாக வலம்வருபவர் ஸ்ரீதிவ்யா. தெலுங்கானாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் தெலுங்குத்திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 2013ம் ஆண்டு வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் லதா பாண்டி கேரக்டரில் நடித்தார். அந்தப்படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது. ஜீவா, கக்கிச்சட்டை, மருது, வெள்ளைக்காரத்துரை என தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்து நடித்தார்.

மேலும், நடிகை ஸ்ரீதிவ்யா ஹோம்லி கேரக்டரில் நடிப்பதால் கவனத்துக்கு உள்ளானார். அதனால் சில ஹோம்லி சப்ஜெட் திரைப்படங்கள் தேடிவந்தன. அண்மைக்காலமாக சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீதிவ்யா, தன் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

Advertisement

இந்நிலையில் நடிகை ஸ்ரீதிவ்யாவின் குழந்தைப்பருவ புகைப்படத்தை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். ஆம்..இந்தக் குழந்தை நடிகை ஸ்ரீதிவ்யா தான். ஸ்ரீதிவ்யா இப்போது அதர்வாவுக்கு ஜோடியாக ‘ஒத்தைக்கு ஒத்தை’ என்னும் படத்தில் நடித்துவருகிறார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in