LifeStyle
இளையராஜாவின் எழுந்து வா பாலு வீடியோவுக்கு எஸ்.பி.பியின் நெகிழ்ச்சி செயல்: நேரில் பார்த்த மருத்துவர் உருக்கம்
மறைந்த பாடகர் எஸ்பிபியின் உடல் அவரது பண்ணை வீட்டில் அரசு மரியாதையுடன் ந ல் ல டக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பகிர்ந்த தகவல் நெகிழ வைத்துள்ளது.
பாடகர் எஸ்பிபி கடந்த ஆகஸ்டு 5 ஆம் திகதி கொ ரோ னா பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
தீ விர சி கி ச்சைக்கு பின்னர் கொ ரோ னாவில் இருந்து மீண்ட பின்னர் நு ரை யீரல் தொடர்பான சி கி ச்சையில் இருந்து வந்தார் எஸ்பிபி. அவர் குணமடைந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தி டீ ரென்று உ டல்நிலை மோ ச ம டைந்து, மா ர டைப்பால் செப்டம்பர் 25 ஆம் திகதி ம ர ண ம டைந்தார். எஸ்பிபி கொரோனாவுடன் போராடிய நாட்களில் ஒருமுறை அவரது உடல்நிலை க வ லை க்கிடமாக இருந்தது. அப்போது அவரது மொத்த ரசிகர்களும் பிரபலங்களும் அவர் நலம்பெற கூட்டுப்பிரார்த்தனை உள்ளிட்ட நிகழ்வுகளில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இளையராஜா எஸ்பிபி தொடர்பில் கண்கலங்க வைக்கும் காணொளி ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் எழுந்து வா பாலு, உனக்காக காத்திருக்கிறேன் என உருக்கமாக பதிவு செய்திருந்தார். குறித்த காணொளியை எஸ்பிபியின் மகன் சரண் தமது தந்தைக்கு காண்பித்துள்ளார். பொதுவாக இதுபோன்ற காணொளிகளை சரண் காண்பிக்கும் போது ஒரு புன்முறுவல் மட்டுமே பதிலாக தரும் எஸ்பிபி,
இளையராஜாவின் அந்த எழுந்து வா பாலு என்ற காணொளி பார்த்து, க ண் க லங்கி, சரணை அருகே அழைத்து, அந்த மொபைலை வாங்கி முத்தம் வைத்துள்ளார். இந்த நிகழ்வை நேரில் பார்த்த மருத்துவர் தீபக் சுப்ரமணியம், அந்த நிமிடங்கள் தங்களால் மறக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். பல ஆண்டு கால நண்பர்களான எஸ்பிபி மற்றும் இளையராஜாவின் பாசப்பிணைப்பு அது என மருத்துவர் தீபக் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
