CINEMA
செட்ல 1200 பேர் வேலை செய்வாங்க…. அட்டைப்பூச்சி தொல்லை தாங்க முடியாது… “கங்குவா” குறித்து பகிர்ந்து Natty…!!

பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமான விஸ்வாசத்தை தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் கங்குவா படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் யுவி கிரியேஷன் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யா மொத்தம் ஏழு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘கங்குவா’. 38 மொழிகளில், 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். படம் நவ.14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இதற்கான ப்ரோமோஷன் வேலைகள் ஒரு புறம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படம் உருவான விதம் குறித்து பேசிய நடராஜன், ஒரு நாளைக்கு செட்ல 1200 பேர் வேலை செய்வாங்க. அங்கு அட்டைப்பூச்சி உண்டு ரொம்ப பாடாய் படுத்தும். அடுத்து கொடைக்கானல் Peakஇல் ஷூட்டிங்க் எடுத்தோம். அங்கு நெட்ஒர்க் கூட கிடையாது. காத்து அடிச்சி எல்லாமே பறந்துடுச்சி என்று பகிர்ந்துள்ளார்.