Uncategorized
பூட்டிய அறைக்குள் சட லமா க கி டந் த இளம் பெண் டாக்டர்! கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வந்தவருக்கு நேர்ந்த கதி..! சென்னையில் நடந்தது என்ன?
வேலூரை சேர்ந்தவர் ரமேஷ். இவர் குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள பெரம்பூரில் வசித்து வருகிறார். இவருக்கு பிரதீபா ( வயது 22) என்ற மகள் உள்ளார். இவர் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு மருத்துவ படிப்பை பயின்று வருகிறார். கொரோனா பாதிப்பால் மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளும் பணியமர்த்தப்பட்டு வந்துள்ளனர். அந்தவகையில் பிரதீபா கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனால் வீட்டிற்கு செல்லாமல் , கடந்த 16ஆம் தேதி முதல் கல்லூரி வளாகத்திலேயே அமைந்திருக்கும் விடுதியில் தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்திருக்கிறார். இந்நிலையில் இன்றைய தினம் காலை நேரத்தில் சகமாணவர்கள் பிரதிபாவின் அறையின் கதவைத் தட்டி இருக்கின்றனர். நீண்ட நேரமாகியும் மாணவி பிரதீபா கதவை திறக்காததால், மற்ற மாணவிகள் அ திர் ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.
அப்பொழுது பிரதீபா மயக்க நிலையில் இருந்திருக்கிறார். உடனடியாக அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர். பரிசோதனை செய்யப்பட்ட பொழுது பிரதீபா ஏற்கனவே இறந்துவிட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து உடனடியாக கீழ்ப்பாக்கம் போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் பிரதிபாவின் செல்போனை கைப்பற்றி தடவியல் பிரிவினருக்கு பொலிஸார் அனுப்பி வைத்துள்ளனர்.
கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் மனோகர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும் இதுகுறித்து பிரதிபாவின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் ஆகியோர் இடத்தில் விசாரணை நடைபெற்றுள்ளது. விசாரணையின்போது சம்பவம் நடைபெற்ற முந்திய தினம் பிரதீபா தன்னுடைய பெற்றோரிடம் செல்போனில் உரையாடி இருக்கிறார். அப்பொழுது கொரோனா பாதிப்பால் தனக்கு அதிகம் வேலைப்பளு இருப்பதாக வருத்தத்துடன் தன் பெற்றோரிடம் கூறி இருக்கிறார் பிரதீபா.
மேலும் போலீசார் பிரதீபா தங்கியிருந்த அந்த தற்காலிக அறையை தீவிரமாக சோதனை செய்துள்ளனர். அவர்களுக்கு எந்த ஒரு கடிதமும் கிடைக்கவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர். ஆகையால் பிரதிபாவின் இச்சம்பவம் மர்மமாகவே உள்ளது என கூறப்படுகிறது. மேலும் பிரதீபாவின் இம்முடிவிற்க்கு காரணம் என்ன என்று போலீசார் பல கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
