15 நிமிடத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமியை காப்பாற்றிய இளைஞ்சர்கள்..?? தாமதமான தீயணைப்பு துறை …!! பதட்டமான நிமிடம் … – cinefeeds
Connect with us

TRENDING

15 நிமிடத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமியை காப்பாற்றிய இளைஞ்சர்கள்..?? தாமதமான தீயணைப்பு துறை …!! பதட்டமான நிமிடம் …

Published

on

விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி செல்லும் வழியில் சின்னபாபு சமுத்திரத்தில் சரோஜா என்பவர் வீடு கட்டிக்கொண்டு இருந்தார் .அப்பொழுது வீட்டிற்காக ஆழ்த்துறை கிணறு தோண்டும் பணிகள் நடந்து கொண்டு இருந்தது .அதில் அவர்கள் தண்ணீருக்காக 10 அடி ஆழமும், 1 அடி அகலத்துக்கு போர்வெல் மெஷின் மூலம் குழி போடப்பட்டுள்ளது. பிறகு அவர்கள் அந்த குழியினை மூடாமல் திறந்த படி விட்டுவுள்ளனர். அந்த புதிய கட்டிடத்திற்கு அருகில் குடி இருந்த பாஸ்கரன் என்பவற்றின் 3 வயது மகள் கோபினி விளையாடி கொண்டு உள்ளாள்.

அப்பொழுது தீடிர் என்று குழந்தை கோபினி அழுகும் சப்தம் கேட்டு கொண்டு இருந்தது. அதில் குழந்தையை தேடும் பொழுது அந்த குழியில் இருந்து சப்தம் வெளிவந்தது. பிறகு உடனடியாக தீயணைப்பு துறைக்கு அழைப்பு விடுத்தனர் . ஆனால் அந்த பகுதியில் இருக்கும் இளைஞ்சர்கள் தீயணைப்பு துறை வரும் வரை நேரத்தை வீணடிக்காமல் அவர்கள் அருகில் இருந்த போக்க்லைனின் மூலம் பக்கத்தில் பள்ளம் தோண்டி குழந்தையை 15 நிமிடத்தில் வெளியெடுத்தனர்.

Advertisement

தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பாகவே . இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மேலும் இந்த குழந்தையை காப்பாற்றிய இளைஞ்சர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in