LifeStyle
operation தியேட்டரில் நடந்த கொடூரம்…?? கடித்து குதறிய நாய்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த பச்சிளங்குழந்தை …??பரபரப்பு சம்பவம்…
உத்திரபிரதேசத்தில் ஃபருகாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நபர் ஒருவருக்கு குழந்தை பிறந்து உள்ளது . அந்த நபருக்கு அறுவை சிகிச்சை செய்து ஒரு ஆண் குழந்தை பிறந்து உள்ளது. குழந்தை பிறந்ததும் அந்த மருத்துவ மனையில் தாயை சாதாரண வார்டுக்கு அழைத்து வந்து விட்டனர். ஆனால் குழந்தையை சிறிது நேரம் கழித்து கொண்டு வருவோம் என்று கூறினார் .ஆனால் ஒரு மணி நேரம் பின்பு குழந்தை இறந்ததாக தெரிவிக்க பட்டது .
பதட்டத்துடன் பெற்றோர்கள் குழந்தையை பற்றி கேட்கையில் அங்கு இருந்த சிலர் அறுவை சிகிச்சை நடக்கும் அறையில் இருந்து சிறிது நேரத்திற்கு முன்பு தான் நாய் ஓன்று வாயில் ரத்தத்துடன் வெளியே ஓடிவந்தது என்று தெரிவித்தனர். மேலும் பதட்டமுடன் அறைக்கு உள்ளே சென்று பார்த்த பொழுது குழந்தை தரையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தது தெரிந்தது .மேலும் போலீசாருக்கு புகார் தெரிவித்து குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். அப்பொழுது குழந்தையின் கழுத்து மற்றும் உடம்பில் சில இடங்களில் பலமாக நாயின் பற்கள் தடயம் காணப்பட்டது .
அதனால் தான் குழந்தை இறந்தது என்று தெரியவந்தது. மேலும் அந்த தனியார் மருத்துவமனை எந்த ஒரு உரிமை சான்றிதழும் பெறாமல் இயங்கிவந்தது என்று தெரியவந்து உள்ளது. மேலும் அந்த தனியார் மருத்துவமனையில் இருக்கும் மருத்துவர்களும் அறுவை சிகிச்சையின் பொழுது இருந்த செவிலியர்களும் கைது செய்ய வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் அந்த மருத்துவமனைக்கு சீல் வைக்க பட்டது.
