LATEST NEWS
தாகத்தால் துடிதுடித்த உயிர்கள்…!லாரி பழுதாகி நடுவழியில் சிக்கிய பயணிகள்… துளி நீரின்றி 49 பேர் பலி…! பெரும் துயரம்…!!
மாலியில் நடந்த ஒரு மத வழிபாட்டு நிகழ்வை முடித்துவிட்டு நைஜர் மற்றும் அல்ஜீரியா எல்லைப் பகுதியில் லாரியில் திரும்பிக் கொண்டிருந்த பயணிகள், சஹாரா பாலைவனத்தில் வாகனப் பழுது காரணமாக நடுவழியில் சிக்கிக் கொண்டனர். சுட்டெரிக்கும் கடுமையான வெயில் மற்றும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனித நடமாட்டமில்லாத சூழலில், கையில் இருந்த உணவு மற்றும் தண்ணீர் தீர்ந்ததால் மாற்று உதவியின்றி அவர்கள் தவித்தனர். இறுதியில், கொடூரமான தாகம் மற்றும் வெப்பத்தின் தாக்கம் காரணமாக 49 பயணிகள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாகத் தங்களின் உயிரை விட்டனர்.
இந்த மரணப் போராட்டத்திற்கு இடையே குழுவில் இருந்த இருவர் மட்டும் துணிச்சலுடன் சுமார் 50 கிலோமீட்டர் தூரம் பாலைவன மணலில் நடந்து சென்று, ஒரு நீர்நிலையைக் கண்டுபிடித்துத் தங்களைக் காத்துக் கொண்டதோடு அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு, நைஜர் நிர்வாகத்தின் சார்பில் அங்கேயே ஒரே பொதுக் கல்லறையில் அடக்கம் செய்தனர். ஐரோப்பாவை நோக்கிச் செல்லும் புலம்பெயர்ந்தோரின் ஆபத்தான பயண வழித்தடமாக இருக்கும் சஹாரா பாலைவனத்தில் நடந்துள்ள இந்த நெஞ்சை உலுக்கும் கொடூரத் துயரம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
