Uncategorized
கொரோன நேரத்திலும் தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! – முதலமைச்சர் பழனிச்சாமி அடுத்த அதிரடி அறிவிப்பு..!
கொரோனா பாதிப்பு கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் இன்னும் ஒரு மாதம் நீடிக்கப்படலாம் என்று தெரிகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அரிசி அட்டைதாரர்களுக்கு அடுத்த ஜூன் மாதமும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மக்களுக்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள இந்த பொருட்கள் மட்டும் போதுமா என்பது கேள்விக்குறி தான்.
உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா நமது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை என்பதே உண்மை, தமிழகத்திலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தற்போது தமிழகத்தில் தலைநகர் சென்னையில் மட்டும் நாள்தோறும் கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகமாக பரவி வருகிறது. இந்தநிலையில், சென்னையில் கொரோனா வேகமாக பரவுவதை கட்டுப்படுத்துவது தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை ரிப்பன் மாளிகையில் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் குறிப்பிட்ட அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கே.சண்முகம் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் தற்போது தமிழகம் தொடர்பான நிலை என்ன என்பது பற்றியும் அடுத்தகட்ட முயற்சி பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது, முதலமைச்சர் பேசுகையில், தமிழகத்தில் யாரும் பட்டினியால் வாடவில்லை என்ற நிலையை அரசு உருவாக்கி இருக்கிறது. தொழிலாளர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளையும் செய்து இருக்கிறோம். சுமார் 36 லட்சம் பேருக்கு கருணைத் தொகை கொடுக்கப்ப ட்டுள்ளதுடன், அவர்களுக்கு விலையில்லா அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது என தெரிவித்தார்.
அரிசி வாங்குகின்ற ரேஷன் அட்டை தாரர்களுக்கும் மட்டும் மே மதம் 500 ரூபாயும் ஜூன் மதம் 500 ரூபாயாக மொத்தம் 1000 ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. மேலும் விலையில்லா அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் கொடுக்கப்படுகிறது. ஏப்ரல் மாதம் வழங்கப்பட்டது. அதே போல் மே மாதமும், ஜூன் மாதமும் என இரண்டு மாதமும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
