“துப்பட்டாவால் கைகளை கட்டி…” முகம் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்… கொலுசை பார்த்து ஷாக்கான போலீஸ்… பரபரப்பு சம்பவம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“துப்பட்டாவால் கைகளை கட்டி…” முகம் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்… கொலுசை பார்த்து ஷாக்கான போலீஸ்… பரபரப்பு சம்பவம்…!!

Published

on

கடலூர் மாவட்டம் வடலூர் கண்ணுத்தோப்பு மேம்பாலத்தின் அருகே, விக்கிரவாண்டி – கும்பகோணம் புதிய நெடுஞ்சாலை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில், அந்தப் பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவரின் உடல் அரைகுறையாகப் புதைக்கப்பட்டிருந்ததை அப்பகுதி வழிப்போக்கர்கள் தற்செயலாகக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பெண்ணின் காலில் இருந்த கொலுசு மட்டும் வெளியே தெரிந்ததால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள், இதுகுறித்து உடனடியாக வடலூர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், மண்ணிற்குள் புதைக்கப்பட்டிருந்த அந்தப் பெண்ணின் சடலத்தை மீட்டனர்.

அப்போது மீட்கப்பட்ட பெண்ணின் முகம், வாய் மற்றும் மூக்குப் பகுதிகள் கொடூரமான முறையில் சிதைக்கப்பட்டிருந்ததோடு, அவரது துப்பட்டாவாலேயே இரு கைகளும் பலமாகக் கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து பிரேதப் பரிசோதனைக்காகப் பெண்ணின் உடல் குறிஞ்சிப்பாடி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நகைக்காக இந்தக் கொலை நடந்ததா, பாலியல் அத்துமீறலுக்குப் பின் சடலம் வீசப்பட்டதா அல்லது ஏதேனும் முன்விரோதம் காரணமா என்ற கோணங்களில் தனிப்படை அமைத்துப் போலீஸார் விசாரித்து வருகின்றனர். கொலையான அந்த மர்மப் பெண் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரங்களைச் சேகரிக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in