LifeStyle
“கெட்ட கொழுப்பு சட்டுனு குறையும்…! தினமும் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா…? கொலஸ்ட்ராலை விரட்டியடிக்க டாக்டர் சொல்லும் சூப்பர் டிப்ஸ்…!!
உடலின் ஆரோக்கியத்தைப் பேணவும், இதய நோய் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கவும் ரத்தத்தில் உள்ள எல்.டி.எல். (LDL) எனப்படும் கெட்ட கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைப்பது அவசியமாகும். இதற்கு ஆலிவ் எண்ணெய், வெண்ணெய், பாதாம் போன்ற மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்த உணவுப் பொருட்களை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது நல்ல பலன் தரும்.
மேலும் ஓட்ஸ், பார்லி, பீன்ஸ் மற்றும் ஆப்பிள், வெண்டைக்காய் போன்ற நார்ச்சத்து அதிகம் உள்ள தாவர உணவுகள் கெட்ட கொழுப்பைக் குறைத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதனுடன் சால்மன், கெளுத்தி போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த கடல் மீன்களை வாரத்தில் இருமுறை உண்பது நல்ல கொழுப்பை (HDL) அதிகரித்து உடலைத் தேம்பட வைக்கும்.
தினமும் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதன் மூலம் கல்லீரலில் கொழுப்பு படிவதைத் தடுத்து, கெட்ட கொழுப்பின் அளவை ஒன்பது சதவீதம் வரை குறைக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இறைச்சி உணவுகளுக்கு மாற்றாக டோஃபு, சோயா பால் போன்ற காய்கறி புரதங்களைச் சேர்ப்பதும், வால்நட் போன்ற நட்ஸ் வகைகளை உண்பதும் கொலஸ்ட்ரால் சமநிலையைப் பராமரிக்க உதவும்.
இந்த உணவு மாற்றங்களுடன் தினசரி அரை மணி நேரம் வேகமான நடைபயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்வது இதயத்தை வலுவடையச் செய்யும். எனினும், இத்தகைய வாழ்வியல் மாற்றங்களைச் செய்வதற்கு முன்பாகத் தகுந்த மருத்துவ ஆலோசனையைப் பெறுவது பாதுகாப்பானது என்று அறிவுறுத்தப்படுகிறது.
