LATEST NEWS
“பணத்தை விட நேர்மைதான் பெருசு…” ரூ.20 லட்சம் மதிப்புள்ள நகை… ஆந்திரக் கூலித்தொழிலாளியின் செயல்… குவியும் பாராட்டுகள்…!!
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீலேகா என்பவர், தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வதற்காகச் சென்றுள்ளார். அப்போது அவர் தங்களுக்குச் சொந்தமான சுமார் இருபது லட்ச ரூபாய் மதிப்புடைய தங்க ஆபரணங்களைத் தனது கைப்பையில் வைத்து எடுத்துச் சென்றுள்ளார்.
ஆனால், எதிர்பாராதவிதமாகப் பயணத்தின் இடையே அந்த நகைப்பை திடீரென மாயமாகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களுக்குச் சென்று தீவிரமாகத் தேடியும் அந்தப் பையைக் கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வந்துள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில், அந்த வழியே வந்த லட்சுமணராவ் என்ற கூலித்தொழிலாளி சாலையோரம் கிடந்த அந்த விலைமதிப்பற்ற நகைப்பையைக் கண்டெடுத்துள்ளார். பையைத் திறந்து பார்த்த அவர், அதற்குள் இருந்த அடையாள அட்டையின் (ஆவணத்தின்) முகவரியை அடிப்படையாகக் கொண்டு, உரியவரான ஸ்ரீலேகாவிற்கு உடனடியாகத் தகவல் கொடுத்துள்ளார்.
மேலும், அந்தப் பையைக் காவல்துறையினரிடமும் அவர் பத்திரமாக ஒப்படைத்தார். அதன் பின்னர், உரிய ஆவணங்களைச் சரிபார்த்து அதிகாரிகள் முன்னிலையில் அந்த நகைகள் ஸ்ரீலேகாவிடம் திரும்ப வழங்கப்பட்டது. வறுமையிலும் அசாத்திய நேர்மையோடு செயல்பட்ட அந்தத் தொழிலாளியின் நற்பண்பை காவலர்களும் பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
