“நான் வராவிட்டால் போலீசுக்கு போ…” கணவரிடமிருந்து விவாகரத்து…! காதலி அனுப்பிய செல்பி வீடியோவால் வெளிச்சத்திற்கு வந்த ஆணவக்கொலை… பகீர் பின்னணி…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நான் வராவிட்டால் போலீசுக்கு போ…” கணவரிடமிருந்து விவாகரத்து…! காதலி அனுப்பிய செல்பி வீடியோவால் வெளிச்சத்திற்கு வந்த ஆணவக்கொலை… பகீர் பின்னணி…!!

Published

on

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டம் சொர்லிகாம் பகுதியைச் சேர்ந்த ஹரிணி என்ற பட்டதாரிப் பெண்ணிற்கு கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணம் ஆகி 4 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்நிலையில், ஹைதராபாத்தில் தங்கி அரசுத் தேர்வுக்காகப் படித்து வந்த ஹரிணிக்கும், நாகேந்திரா என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இதனால் தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றுத் தருமாறு கடந்த பிப்ரவரி மாதம் அவர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இதனால் தங்களது குடும்பக் கௌரவம் பாதிக்கப்படும் என ஆத்திரமடைந்த ஹரிணியின் தாய் விஜயகுமாரி மற்றும் தாத்தா பாலு ஆகியோர், விவாகரத்து வாங்கித் தருவதாகப் பொய் கூறி அவரை ஊருக்கு வரவழைத்து, மே 31 நள்ளிரவில் இரும்புக் கம்பியால் தலையில் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்தனர். பின்னர், அவர் மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடி அவசர அவசரமாக உடலையும் எரித்துள்ளனர்.

Advertisement

முன்னதாக, தந்து சொந்த ஊருக்குக் கிளம்பும் போதே தனது குடும்பத்தினர் மீது சந்தேகம் இருப்பதாகக் காதலனிடம் கூறியிருந்த ஹரிணி, “நான் ஒரு வாரத்திற்குள் திரும்பாவிட்டால்  புகார் செய்” என்று ஒரு செல்பி வீடியோவையும் நாகேந்திராவிற்கு அனுப்பியிருந்தார். அதன்படி காதலி வராததால் அதிர்ச்சியடைந்த நாகேந்திரா, அந்த ஆதார வீடியோவுடன் காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

இப்புகாரின் பேரில் போலீசார் நடத்திய அதிரடி மற்றும் தீவிர விசாரணையில், மறைக்கப்பட்ட ஆணவக்கொலைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதைத்தொடர்ந்து, கொலையை மறைக்கத் துணையாக இருந்த ஹரிணியின் கணவர், கொடூரக் கொலையைச் செய்த தாய் மற்றும் தாத்தா ஆகிய மூன்று பேரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in