பேட்ட படத்துக்கு பின் மீண்டும் ரஜினியுடன் இணைந்த நடிகை சிம்ரன், இந்த வாய்ப்பை பெற்றுக்கொடுத்தது அந்த இயக்குனர்தானா? வெளிச்சத்துக்கு வந்த உண்மை! – cinefeeds
Connect with us

CINEMA

பேட்ட படத்துக்கு பின் மீண்டும் ரஜினியுடன் இணைந்த நடிகை சிம்ரன், இந்த வாய்ப்பை பெற்றுக்கொடுத்தது அந்த இயக்குனர்தானா? வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

Published

on

Actress Simran

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் நடிகை சிம்ரன் நடித்திருந்தார். அந்த படத்தைத் தொடர்ந்து இப்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தர்மன் படத்திலும் நடிகை சிம்ரன் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது. இதற்கு முன்பு ரஜினி படத்தை இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக இருந்த நிலையில் அவர்தான் அந்த படத்துக்காக சிம்ரனை கமிட் செய்திருந்தார்.

ஆனால் ரஜினி படத்தை அவர் இயக்காத நிலையிலும் நடிகை சிம்ரன், அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தில் கதாநாயகியாக தொடர்கிறார். அதற்கு முக்கியமான காரணம் அந்த படத்துக்கு தந்த அட்வான்ஸ்சை திருப்பி கேட்க முடியாது என்பதால் தான் இந்த படத்தில் ரஜினிக்கு மீண்டும் 2ம் முறையாக நடிகை சிம்ரன் ஜோடியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பு என்பதாலும் சிம்ரன் கமிட் செய்யப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in