LATEST NEWS
நடிகர் பாக்யராஜுக்கு அரசு மரியாதை..!முதலமைச்சர் விஜய்க்கு… நடிகர் சாந்தனு உருக்கமான நன்றி..!!!
பிரபல இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார். திரைத்துறைக்கு அவர் ஆற்றிய மிகச்சிறந்த பங்களிப்பைப் போற்றும் வகையில், தமிழக அரசு சார்பில் அவருக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. பெசன்ட் நகர் மின்மயானத்தில் 72 குண்டுகள் முழங்க, அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
தன் தந்தையின் மறைவால் துயரமடைந்திருந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற முதலமைச்சர் விஜய் நேரில் வருகை தந்தார். அப்போது அவர் தனது முதலமைச்சர் என்ற பதவி அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல், மிகவும் எளிமையுடன் மண்டியிட்டு சாந்தனுவின் தாயாருக்கு ஆறுதல் கூறினார். முதலமைச்சரின் இந்த கனிவான செயல் சாந்தனுவின் குடும்பத்தினரை நெகிழச் செய்தது.
தனது தந்தைக்குக் கிடைத்த இந்த இமாலய அரசு மரியாதைக்காகவும், முதலமைச்சரின் நேரில் வந்து ஆறுதல் கூறிய செயலுக்காகவும் சாந்தனு தனது எக்ஸ் தளத்தில் உருக்கமான நன்றிப் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என் திருமணத்திற்கு தாலி எடுத்து தந்து மகிழ்ச்சியைத் தொடங்கி வைத்தீர்கள்; இப்போது என் தந்தையின் மரணத்திலும் கம்பீரமான அரசு மரியாதையைத் தந்துள்ளீர்கள். இந்த நன்றியுணர்வு மெய்யாகவே என் உயிர் உள்ளவரை நீடிக்கும்” என முதலமைச்சர் விஜய்க்கு தனது இதயப்பூர்வமான நன்றியை அண்ணா என்று குறிப்பிட்டு சாந்தனு தெரிவித்துள்ளார்.
