“ஓராண்டு பொறுத்திருங்கள்” போனவங்க திரும்பி வருவாங்க… அதிருப்தி நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ரகசிய அசைன்மென்ட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஓராண்டு பொறுத்திருங்கள்” போனவங்க திரும்பி வருவாங்க… அதிருப்தி நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ரகசிய அசைன்மென்ட்..!!

Published

on

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி , அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் நடத்திய அவசர ஆலோசனைக் கூட்டத்தில், தற்போதைய தவெக அரசு மற்றும் கட்சியின் நகர்வுகள் குறித்துப் பரபரப்பான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தவெக தலைமை ஆட்சியிலும், கட்சியிலும் நிச்சயமாக ஏதேனும் ஒரு கட்டத்தில் தவறு செய்யும் என்று அவர் இந்த ஆலோசனையின் போது மிக உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக அதிமுகவிலிருந்து விலகித் தவெக-வில் புதிதாக இணைந்தவர்களுக்கு, அங்கு போதிய முக்கியத்துவமோ அல்லது எதிர்பார்த்த பதவிகளோ கிடைக்காத ஒரு ஏமாற்றமான சூழல் விரைவில் உருவாகும் என்று எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறு தவெக-வுக்குள் உள்முரண்பாடுகளும் சலசலப்புகளும் ஏற்படும் போது, கட்சியை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் அனைவரும் மீண்டும் தங்களின் தாய் கழகமான அதிமுகவிற்கே தேடி வருவார்கள் என்று அவர் நிர்வாகிகளிடம் விவரித்துள்ளார்.

Advertisement

தவெகவின் இந்த அதிரடி ஆள் பிடிப்பு வியூகங்களால் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கலக்கத்தைப் போக்கும் வகையில், எடப்பாடி பழனிசாமி அவர்களைச் சமாதானப்படுத்தியுள்ளார். அதுவரை அனைவரும் பொறுமைகாக்க வேண்டும் என்றும், “ஓராண்டு காலம் மட்டும் அமைதியாகப் பொறுத்திருங்கள்” என்று கூறி நிர்வாகிகளுக்கு அவர் புதிய நம்பிக்கையை ஊட்டியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in