LATEST NEWS
தோல்விக்கு பிறகும் நிர்வாகிகள் விலகலை சந்திக்காத திமுக..! ஆக்ஷன் எடுக்காமல் ஸ்டாலின் அமைதியாக இருக்க என்ன காரணம்..!!
தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் இருந்து முக்கிய முகங்கள் பலர் தவெகவில் இணைந்துள்ளனர். திமுகவுடன் கூட்டணி சேர எடப்பாடி கே. பழனிசாமி முயன்றதே இதற்கு முக்கியக் காரணம் என்று கட்சியில் இருந்து விலகியவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மறுபக்கம், தேர்தல் தோல்விக்கு பிறகும் நிர்வாகிகள் விலகல் போன்ற பெரிய அளவிலான பாதிப்புகளை திமுக சந்திக்கவில்லை. சரியாக வேலை செய்யாத மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திட்டமிட்டிருந்ததாகத் தெரிகிறது.
இருப்பினும், தற்போதைய சூழலில் மா.செ.,-க்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அதிமுக போன்ற ஒரு இக்கட்டான நிலைமை தன் கட்சிக்கும் வந்துவிடுமோ என்ற அச்சத்தினால், ஸ்டாலின் அவர்கள் தற்காலிகமாக அமைதியாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
