LATEST NEWS
பாகிஸ்தான் ராணுவத்தின் கொடூரம்…! இந்தியர்களின் ஆதரவைக் கோரும் POK மக்கள்..!!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல்களுக்கு எதிராக இன்று போராட்டம் நடத்துவதற்கு ‘கூட்டு அவாமி நடவடிக்கை குழு’ அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டத்திற்கு தங்களுக்கு ஆதரவளிக்குமாறு அக்குழுவினர் இந்தியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீநகர், லடாக், பூஞ்ச், ராஜௌரி மற்றும் ஜம்மு ஆகிய பகுதி மக்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக உறுதியுடன் நிற்க வேண்டும் என்று கூட்டு அவாமி நடவடிக்கை குழுவின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தாங்கள் தங்களின் அடிப்படை உரிமைகளைக் கேட்கும் போது, பாகிஸ்தான் ராணுவத்தால் கொடூரமாகத் தாக்கப்படுவதாக அக்குழுவின் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தங்களுக்குக் கிடைக்க வேண்டிய அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் திட்டமிட்டுத் தடுக்கப்படுவதாகவும் அவர் அதில் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
