LATEST NEWS
ஒரே நாளில் கோடீஸ்வரர்..! போன் காலில் வந்த அதிர்ஷ்டம்…! பிராங்க் என்று நினைத்த இந்தியப் பெண்ணுக்கு அடித்த மெகா ஜாக்பாட்..!!!
துபாயில் வசிக்கும் சஞ்சீவனி என்ற இந்தியப் பெண்ணுக்கு அபுதாபி பிக் டிக்கெட் அதிர்ஷ்டக் குலுக்கலில் சுமார் 58 கோடி ரூபாய் மெகா ஜாக்பாட் அடித்துள்ளது. சும்மா முயற்சி செய்து பார்ப்போம் என்று கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி அவர் வாங்கிய ‘292275’ என்ற எண் கொண்ட லாட்டரி டிக்கெட்டிற்கு இந்த பெரும் அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. இத்தொகை தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மாற்றியமைத்துள்ளதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
குலுக்கல் முடிவடைந்ததும் பிக் டிக்கெட் அமைப்பாளர்களிடம் இருந்து சஞ்சீவனிக்கு ஒரு போன் கால் வந்துள்ளது. ஆரம்பத்தில் அதை யாரோ தன்னிடம் விளையாடுகிறார்கள் என்று நினைத்து அவர் நம்ப மறுத்துள்ளார். ஆனால், பின்னர் அது உண்மையான அழைப்புதான் என்பதை உறுதிப்படுத்திய போது, அவராலும் அவரது கணவராலும் அந்த மகிழ்ச்சியான செய்தியைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
சஞ்சீவனி கடந்த 15 வருடங்களாகத் தனது குடும்பத்துடன் துபாயில் வசித்து வருகிறார். இந்த பிரம்மாண்டமான பரிசுத் தொகையைக் கொண்டு தனது குழந்தைகளின் எதிர்காலக் கல்விக்குத் திட்டமிடப் போவதாகவும், மேலும் ஒரு பகுதியைத் தொண்டு நிறுவனங்களுக்குக் கொடுத்து உதவ விரும்புவதாகவும் அவர் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.
