“என் சாவுக்கு அவதான் காரணம்” பெத்தவங்களை கூட பாக்க விடமாட்டேங்குறா… மனைவியின் டார்ச்சரால் வாலிபர் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சி வீடியோ பதிவு..! – cinefeeds
Connect with us

CRIME

“என் சாவுக்கு அவதான் காரணம்” பெத்தவங்களை கூட பாக்க விடமாட்டேங்குறா… மனைவியின் டார்ச்சரால் வாலிபர் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சி வீடியோ பதிவு..!

Published

on

தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்யாணம் ராகேஷ் என்ற வாலிபர், ஹைதராபாத்தைச் சேர்ந்த சஞ்சனா என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு இருவரும் கரீம்நகரின் சரஸ்வதி நகர் பகுதியில் வசித்து வந்தனர். இவர்களது திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகச் சென்றபோதிலும், சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளன.

சஞ்சனா தனது கணவர் ராகேஷுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, ராகேஷ் தனது சொந்தப் பெற்றோரைக் நேரில் சந்திப்பதற்கோ அல்லது தொலைபேசி மூலம் பேசுவதற்கோ கூட சஞ்சனா அனுமதிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் பெற்றோரையும் குடும்பத்தினரையும் பிரிந்து, மனைவியின் தொடர்ச்சியான மன உளைச்சலுக்கும், சித்திரவதைக்கும் ஆளான ராகேஷ் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகி, இறுதியில் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

Advertisement

ராகேஷின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது தந்தை கரீம்நகர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், தனது மருமகள் சஞ்சனாவின் தொடர் மனக் கொடுமையே தன் மகனின் தற்கொலைக்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தந்தையின் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், ராகேஷின் மரணம் குறித்து அனைத்துக் கோணங்களிலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in