செந்தில் பாலாஜி திடீர் தலைமறைவு.. போலீஸ் போட்ட ரகசிய பிளான்.. குதிரை பேர வழக்கில் இன்று நடக்கப்போகும் அதிரடி ட்விஸ்ட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

செந்தில் பாலாஜி திடீர் தலைமறைவு.. போலீஸ் போட்ட ரகசிய பிளான்.. குதிரை பேர வழக்கில் இன்று நடக்கப்போகும் அதிரடி ட்விஸ்ட்..!!

Published

on

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘குதிரை பேர’ வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் போலீஸ் சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாததால் அவர்கள் இருவரும் தற்போது தலைமறைவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆளுங்கட்சியான தவெக-வின் உத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் என். இளையராஜா, சட்டமன்ற சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தில் தனக்கு ஆதரவாக வாக்களிக்க ₹35 கோடி பேரம் பேசப்பட்டதாகவும், அதற்கு மறுத்ததால் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் காவல் துறையிடம் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்கு லுக்-அவுட் நோட்டீஸ் செய்யப்பட்ட நிலையில், அவர்கள் விசாரணைக்கு வராமல் தங்கியிருக்கும் இடத்தை மாற்றிக் கொண்டிருப்பதால், அடுத்தகட்டமாக அவர்களைக் கைது செய்ய போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, இந்த பணத்திற்குப் பின்னால் இருக்கும் சதித்திட்டங்களை வெளிக்கொண்டு வரும் நோக்கில், குதிரை பேர வழக்கில் இதுவரை கைதாகியுள்ள 9 நபர்களில் 6 பேரைத் தங்களது காவலில் எடுத்துத் தீவிர விசாரணை நடத்த போலீஸார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த போலீஸ் காவல் மனு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் வரவுள்ள நிலையில், இந்த வழக்கு ஒட்டுமொத்த தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. தவெக அரசை வீழ்த்த எதிர்க்கட்சியான திமுக பின்னணியில் இருந்து செயல்பட்டதா என்பது குறித்த பல்வேறு அதிர்ச்சியூட்டும் உண்மைகள் இந்த போலீஸ் காவல் விசாரணையின் மூலம் வெளிவரலாம் என்பதால், கோட்டை வட்டாரத்தில் அடுத்தடுத்த நகர்வுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in