LATEST NEWS
மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500… உடனே இந்த 3 விஷயத்தையும் பண்ணுங்க… அமைச்சர் சொன்ன முக்கிய கண்டிஷன்..!!
தமிழக முதலமைச்சர் விஜய் அறிவித்த முக்கிய வாக்குறுதியான மகளிருக்கான மாத உதவித்தொகை ரூ.2,500 விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார். இத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதால், தகுதியுள்ள பயனாளிகள் தங்களின் வங்கி மற்றும் குடும்ப அட்டை விவரங்களைச் சரியாக வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்தத் தொகையைப் பெறுவதற்குப் பயனாளிகள் மூன்று முக்கிய நடைமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதலாவதாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் (Aadhaar-Bank Linking). இரண்டாவதாக, விரல் ரேகை அல்லது மொபைல் ஓடிபி (OTP) மூலம் e-KYC சரிபார்ப்பை முழுமையாக நிறைவு செய்திருக்க வேண்டும்.
மூன்றாவதாக, குடும்ப ஸ்மார்ட் கார்டுடன் தற்போதைய மொபைல் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதும் அவசியமாக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று நடைமுறைகளும் சரியாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே, பெண்களுக்கான மாத உதவித்தொகை எந்தவிதத் தடையுமின்றி நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
