LATEST NEWS
“தொழிலாளர்களுக்கு அடித்த பம்பர் லாட்டரி.. உங்க அக்கவுண்டிற்கு வரப்போகும் கூடுதல் பணம்.. எவ்வளவு தெரியுமா?.. மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு”..!!
2025-26ஆம் நிதியாண்டிற்கான தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி சேமிப்பிற்கு 8.25 சதவீத வட்டி வழங்க மத்திய நிதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற இபிஎப்ஓ உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவின் மூலம், நாடு முழுவதும் உள்ள 8 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் பயனடைய உள்ளனர். மேலும், இந்த வட்டித் தொகையை வரும் ஜூலை 16ஆம் தேதிக்குள் தொழிலாளர்களின் வைப்பு நிதிக் கணக்குகளில் விரைவாக வரவு வைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா உத்தரவிட்டுள்ளார்.
இந்த வட்டி விகிதத்தின்படி, தொழிலாளர்களின் கணக்கில் ஒரு லட்சம் ரூபாய் சேமிப்பு இருந்தால் 8,250 ரூபாயும், இரண்டு லட்சம் ரூபாய் இருந்தால் 16,500 ரூபாயும், ஐந்து லட்சம் ரூபாய் சேமிப்பு இருந்தால் 41,250 ரூபாயும் வட்டியாக வரவு வைக்கப்படும். இந்த வட்டித் தொகையானது சந்தாதாரர்களின் பி.எப். கணக்கில் ஆண்டு அடிப்படையில் டெபாசிட் செய்யப்பட்ட மொத்த தொகையைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. முன்னதாக கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பி.எப் வட்டி விகிதம் 8.15 சதவீதத்திலிருந்து 8.25 சதவீதமாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
