Uncategorized
EPS க்கு உச்சக்கட்ட நெருக்கடி.. அதிமுக கோட்டையில் அடுத்தடுத்து விழும் ஓட்டைகள்.. எடப்பாடி பழனிசாமியை அலறவிடும் அதிமுக எம்.எல்.ஏ-க்கள்.. அதிரும் அரசியல் களம்..!!
அதிமுகவை மீண்டும் பலப்படுத்துவதற்காக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடத்தப்படும் மாவட்ட வாரியான ஆலோசனை கூட்டங்களை, கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தொடர்ந்து புறக்கணித்து வருவது அவருக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, இன்று கிருஷ்ணகிரியில் நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை ஓசூர் எம்.எல்.ஏ-வான பாலகிருஷ்ணன் ரெட்டி அதிருப்தி காரணமாகப் புறக்கணித்துள்ளார். கடந்த காலங்களில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மறைமுக ஆதரவு அளித்ததாகக் கூறி அவரிடமிருந்து பறிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் பதவி, இதுவரை மீண்டும் வழங்கப்படாததால் அவர் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிமுக உட்கட்சிப் பூசல் மற்றும் அதிருப்தி இத்துடன் முடிவடையாமல், எடப்பாடி பழனிசாமிக்குத் தொடர்ந்து தலைவலியைத் தந்து வருகிறது. இன்றைய கிருஷ்ணகிரி கூட்டத்திற்கு முன்பாகவே, கட்சியின் மூத்த நிர்வாகிகளான ஆற்காடு எம்.எல்.ஏ சுகுமார் மற்றும் ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ கே.சி.வீரமணி ஆகியோரும் தங்களுக்குள் இருந்த அதிருப்தி காரணமாக முந்தைய ஆலோசனைக் கூட்டங்களைப் புறக்கணித்திருந்தனர். கட்சியின் முக்கியப் பொறுப்பிலுள்ள எம்.எல்.ஏ-க்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் அடுத்தடுத்து எடப்பாடி பழனிசாமியின் கூட்டங்களைப் புறக்கணித்து வருவது, தவெக-வின் அரசியல் எழுச்சிக்கு மத்தியில் அதிமுகவிற்குள் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
