“பள்ளி மாணவர்களுக்கு செம்ம ஹேப்பி நியூஸ்!.. காலை சிற்றுண்டி திட்டத்தில் புதிய பூஸ்ட்.. அரசு அசத்தல் அறிவிப்பு”..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பள்ளி மாணவர்களுக்கு செம்ம ஹேப்பி நியூஸ்!.. காலை சிற்றுண்டி திட்டத்தில் புதிய பூஸ்ட்.. அரசு அசத்தல் அறிவிப்பு”..!!

Published

on

புதுச்சேரி மாநில அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளின் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நோக்கில், ராஜீவ்காந்தி காலை உணவுத் திட்டத்தில் ஒரு புதிய மாற்றம் கொண்டு வரப்படவுள்ளது. இதன் கீழ், மாணவர்களுக்கு வழங்கப்படும் பாலுடன் இனி ‘சாக்லேட் மால்ட் ஹெல்த் மிக்ஸ்’ எனும் ஊட்டச்சத்துப் பொடியைக் கலந்து கொடுப்பதற்கான புதிய வழிமுறை மிக விரைவில் அமலுக்கு வரவிருக்கிறது. தற்போது இத்திட்டத்தின் மூலம் எல்.கே.ஜி. முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு 100 மி.லி. சூடான பால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இனிவரும் நாட்களில் மாணவர்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் வகையில் பாலுடன் சாக்லேட் மால்ட் ஹெல்த் மிக்ஸ் கலந்து வழங்க புதுவை அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக புதுச்சேரி அரசு மற்றும் ஸ்ரீ சத்யசாய் அன்னபூர்ணா அறக்கட்டளை ஆகிய இரு தரப்பிற்கும் இடையேயான அதிகாரப்பூர்வ கூட்டு ஒப்பந்தம், கல்வித்துறை செயலரின் அலுவலகத்தில் முறைப்படி கையெழுத்தாகியுள்ளது. இந்நிகழ்ச்சியில், புதுவை அரசின் கல்வித் துறை செயலர் கிருஷ்ண மோகன் உப்பு மற்றும் சத்யசாய் அன்னபூர்ணா அறக்கட்டளையின் அறங்காவலர் சந்தோஷ் அல்லத் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த புதிய ஆரோக்கிய திட்டத்தின் மூலம் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் நேரடியாகப் பயன்பெறுவார்கள் என்று கல்வித்துறை வட்டாரங்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in