LATEST NEWS
“தீயசக்தியை திருத்தவே முடியாது” அதனால இடைத்தேர்தல்ல வச்சு வெளுத்து விட்ருங்க.. ஆப்பு வைத்த விஜய்… அதிர்ச்சியில் ஸ்டாலின்..!!
கரூரில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய், திமுகவைச் சரமாரியாகத் தாக்கிப் பேசினார். “தவெக ஆட்சி நடப்பது தெரியாமல் திமுக தூக்கத்தில் இருக்கிறது” என்று குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசியல் சூழல் குறித்து திமுகவிற்குச் சாட்டையடி கொடுத்துள்ளார்.
தொடர்ந்து திமுகவின் அரசியல் அணுகுமுறையை விமர்சித்த அவர், திமுக நேர்மையான அரசியலைச் செய்ய வேண்டும் என்றும், ஆனால் அவர்களுக்கு நேர்மையான அரசியல் செய்யத் தெரியாது என்றும் சாடினார். மேலும், “தீயசக்தியை திருத்த முடியாது, அவர்களும் திருந்த மாட்டார்கள்” என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் அவர் சாடிப் பேசினார்.
இறுதியாக, வரவிருக்கும் இடைத்தேர்தலை முன்னிறுத்திப் பேசிய முதலமைச்சர் விஜய், “வருகிற இடைத்தேர்தலில் திமுகவை வச்சு வெளுத்து விடுங்க மக்களே” என்று கூட்டத்தில் திரண்டிருந்த பொதுமக்களுக்குப் பகிரங்கமாக அழைப்பு விடுத்தார். விஜய்யின் இந்த ஆவேசமான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
