LATEST NEWS
“தாயை விடுத்து ஓடிப்போன தந்தைக்கா அரசு வேலை?” கரூர் விபத்தில் பலியான சிறுவனின் தாய் கண்ணீர் குற்றச்சாட்டு: முதலமைச்சர் விஜய்க்கு முற்றிய புதிய சிக்கல்..!!
கரூர் தவெக மாநாட்டு கூட்ட நெரிசல் விபத்தில் பலியான 9 வயது சிறுவன் பிரதிக் என்பவனின் தாய் சர்மிளா வெளியிட்டுள்ள வீடியோ வாக்குமூலம், தவெக அரசுக்கும் முதலமைச்சர் விஜய்க்கும் புதிய நிர்வாக மற்றும் அரசியல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தன் மகன் 6 மாதக் குழந்தையாக இருந்தபோதே தன் கணவர் பன்னீர்செல்வம் தங்களைக் கைவிட்டு ஓடிவிட்டதாகவும், கடந்த 8 ஆண்டுகளாக எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்த அவருக்கு அரசு வேலை வழங்க அரசு முடிவு செய்திருப்பது அப்பட்டமான அநீதி என்றும் சர்மிளா கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளார்.
தனைக் கைவிட்ட கணவர் பன்னீர்செல்வத்திற்கு அரசுப் பணி வழங்கப்படுவதை எதிர்த்து, சிபிஐ விசாரணை கோரி சர்மிளா நீதிமன்றத்தை நாடியுள்ளார். மகனை இழந்து தவிக்கும் தனக்கே நீதி கிடைக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் தலையிடும்படி அவர் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.
