CRIME
மலையேற்ற விபத்து டூ திட்டமிட்ட சதி…! நீதிக்காகக் குடியரசுத் தலைவரின் கதவைத் தட்டும் கேதனின் தந்தை..! பின்னணி என்ன…?!
பூனாவைச் சேர்ந்த 26 வயது தொழிலதிபர் கேதன் அகர்வால், லோனாவாலா அருகில் உள்ள லோஹகாட் கோட்டையில் இருந்து 400 அடி ஆழப் பள்ளத்தில் தள்ளிவிடப்பட்டு கடந்த ஜூன் மாதம் படுகொலை செய்யப்பட்டார். தன் ஒரே மகனைப் பறிகொடுத்த அதிர்ச்சியிலும் வேதனையிலும் இருந்த கேதனின் 71 வயது தாத்தா தேவிசந்த் அகர்வால், அடுத்த சில நாட்களிலேயே மாரடைப்பால் காலமானார். இதனால், வெறும் 20 நாட்களுக்குள் தன் மகனையும், தந்தையையும் ஒரே நேரத்தில் இழந்து தவிப்பதாகக் கேதனின் தந்தை விஷால் அகர்வால் மிகுந்த மனவேதனையுடன் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் இது ஒரு மலையேற்ற விபத்து என்று கருதப்பட்டாலும், கேதனின் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் இது திட்டமிட்ட படுகொலை என்பது அம்பலமானது. கேதனின் வருங்கால மனைவி சியா கோயல், தான் காதலித்து வந்த சேத்தன் சௌத்ரி என்பவருடன் சேர்ந்து இந்த கொடூரக் கொலையை அரங்கேற்றியுள்ளார். திருமணத்திற்கு முன்பே காதலனை ரகசியமாகத் திருமணம் செய்துகொண்ட சியா, இந்தத் திருமணத்தை நிறுத்தவே கேதனை கோட்டைக்கு அழைத்துச் சென்று காதலனுடன் சேர்ந்து பள்ளத்தில் தள்ளிவிட்டுள்ளார். தற்போது இவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
https://www.youtube.com/channel/UCM1VqjE2rshkzKfp4zRVwKA
