குஷியோ குஷி..! மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்களுக்கு தபால் மூலம் வீட்டுக்கு பணம் வரும்..? வெளியான சூப்பர் குட் நியூஸ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குஷியோ குஷி..! மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்களுக்கு தபால் மூலம் வீட்டுக்கு பணம் வரும்..? வெளியான சூப்பர் குட் நியூஸ்..!!

Published

on

ஜூலை மாத மகளிர் உரிமைத்தொகை தவணை கிடைக்காத தகுதியான பயனாளிகளுக்கு போஸ்ட் ஆபீஸ் மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்ப அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாதங்களில் முறையாக ஆயிரம் ரூபாய் பெற்றவர்களில் சிலருக்கு, இந்த மாதத்திற்கான தொகை இன்னும் தங்களது வங்கிக் கணக்கில் வரவில்லை எனப் பரவலாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இது குறித்து அரசு அதிகாரிகள் மட்டத்திலிருந்து கிடைத்துள்ள புதிய தகவலின்படி, தங்களின் வங்கிக் கணக்கில் e-KYC அப்டேட் செய்யாத பயனாளிகளின் கணக்குகளுக்குத் தொகையைச் செலுத்த முடியாத தொழில்நுட்பச் சிக்கல் ஏற்பட்டுள்ளதே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

இத்தகைய வங்கித் தொழில்நுட்பச் சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்குத் தொகையைத் தாமதமின்றிச் சேர்க்கும் நோக்கில், அஞ்சல் துறை மூலமாக நேரடியாக மணி ஆர்டராக அனுப்பும் பணிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். வங்கிக் கணக்கில் ஆதார் மற்றும் e-KYC விவரங்கள் சரியாக இல்லாதவர்களையும், இதனால் உரிமைத்தொகை விடுபட்டவர்களையும் கண்டறிந்து அவர்களின் வீட்டு முகவரிக்கே பணத்தை கொண்டு சேர்க்கும் இந்த மாற்று ஏற்பாடு பயனாளிகளிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in