பயங்கர சர்ச்சை..! “தேவதூதர் சிஎம் விஜய்.. மாரியம்மன் ஜோதிமணி” கரூரில் நள்ளிரவில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பெரும் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பயங்கர சர்ச்சை..! “தேவதூதர் சிஎம் விஜய்.. மாரியம்மன் ஜோதிமணி” கரூரில் நள்ளிரவில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பெரும் பரபரப்பு..!!

Published

on

கரூர் மாவட்டத்தில் கோயில்களுக்குச் சொந்தமான மொத்தம் 3,084 ஏக்கர் இனாம் நிலங்களின் பத்திரப்பதிவு தடையை நீக்கித் தமிழக அரசு அண்மையில் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கரூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக நகரின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் (Posters) தற்போது சமூக வலைத்தளங்களில் கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

அந்தச் சுவரொட்டிகளில், “கரூரில் 3,084 ஏக்கர் இனாம் நிலப் பிரச்சினையைத் தீர்த்து வைத்த கர்த்தரின் தேவதூதராகிய முதல்வர் ஜோசப் விஜய்” என்றும், “அவருக்கு உறுதுணையாக நின்ற, கரூர் மக்களின் இதயங்களில் மாரியம்மனாக வாழும் எம்பி ஜோதிமணி” என்றும் வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்து கோயில்களின் நிலப் பிரச்சினை தொடர்பான ஒரு விவகாரத்தில், இந்து கடவுளான மாரியம்மனுடன் அரசியல் தலைவர்களை ஒப்பிட்டு இழிவுபடுத்தியதாகவும், இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இந்த வாசகங்கள் அமைந்துள்ளதாகவும் கூறி பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினர் இந்த போஸ்டர்களுக்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in