CRIME
பள்ளி நூலகத்தில் நடந்த பகீர் காரியம்!.. 8 ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்… காமவெறி ஆசிரியர் கைது.. பீகாரில் பரபரப்பு..!!
பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி நூலகத்தில், 8-ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை ஆசை வார்த்தைகள் கூறி கணினி ஆசிரியர் ஆஷிஷ் குமார் பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக மாணவியின் நடத்தையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தையும் மன உளைச்சலையும் கண்டு குடும்பத்தினர் விசாரித்தபோது இக்கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவி தற்போது கர்ப்பமாக இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ள நிலையில், இத்தகவல் மருத்துவ பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படும் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தை அறிந்த மாணவியின் உறவினர்கள் பள்ளிக்குச் சென்று ஆசிரியரிடம் நியாயம் கேட்டபோது இருதரப்புக்கும் இடையே கடுமையான கைகலப்பு ஏற்பட்டு பதற்றம் நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தர்ஹாரா போலீசார், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் குடும்பத்தினர் அளிக்கும் புகாரின் அடிப்படையில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் ஆசிரியர் மீது போக்சோ (POCSO) உள்ளிட்ட கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
