LATEST NEWS
“யார்டா இவரு…” பாலென்சியாகா-வே தோத்துடும் போல..! வெஸ்டர்ன் ரயில்வே லோகோவுடன் தூள் கிளப்பும் ‘குர்தா தாத்தா’..! இணையத்தைக் கலக்கும் வீடியோ..!!
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கௌரிஹார் சந்தையில், முதியவர் ஒருவர் இந்திய இரயில்வேயின் படுக்கை விரிப்பில் தைக்கப்பட்ட குர்தா அணிந்து உலா வந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘ரஞ்ஜீத் சிங்’ என்ற இன்ஸ்டாகிராம் பயனர் பகிர்ந்த இந்த வீடியோவில், அந்த பெரியவர் ‘வெஸ்டர்ன் ரயில்வே’ லோகோ அச்சிடப்பட்ட வெள்ளைக் குர்தாவை எவ்வித தயக்கமும் இன்றி இயல்பாக அணிந்து நடந்து செல்வதைக் காண முடிகிறது.
இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் தங்களது நகைச்சுவையான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். “ரயில்வே சொத்து நாட்டின் சொத்து என்பதைப் பெரியவர் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு விட்டார்” என்றும், “பிரபல சர்வதேச ஆடை பிராண்டான ‘பலேன்சியாகா’வே இவருக்கு முன்னால் தோற்றுவிடும்” என்றும் கிண்டல் செய்து வருகின்றனர். மேலும் சிலர் இவரை இரயில்வேயின் ‘பிராண்ட் அம்பாசிடர்’ என்றும் செல்லமாக அழைத்து வருகின்றனர்.
https://www.instagram.com/reel/Da7sLa_sxXa/?utm_source=ig_web_button_share_sheet
இரயில்வே ஏசி பெட்டிகளிலிருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான படுக்கை விரிப்புகள் திருடப்படுவதாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கும் நிலையில், இந்தச் சம்பவம் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இரயில்வே நிர்வாகம் தனது பழைய படுக்கை விரிப்புகளை ஏலத்தில் விற்பனை செய்வது வழக்கம் என்பதால், பெரியவர் அதனை ஏலத்தில் வாங்கி குர்தாவாகத் தைத்திருக்கலாம் என்றும் சிலர் கருதுகின்றனர். இந்தத் துணி அவருக்கு எப்படி கிடைத்தது என்பது உறுதி செய்யப்படவில்லை என்றாலும், இந்த ‘ரயில்வே குர்தா’ இணையத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
