LATEST NEWS
பரபரப்பு ..! இந்திய வரலாற்றிலேயே இளைஞர்களை இவ்வளவு வெறுத்த பிரதமர் யாரும் இல்லை… மோடியை நேருக்கு நேர் சாடிய ராகுல் காந்தி..!!
“இந்திய வரலாற்றிலேயே இளைஞர்கள் மீது அதிக வெறுப்பு கொண்ட பிரதமராக நரேந்திர மோடி உள்ளார்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நீட் உள்ளிட்ட பல்வேறு அரசுப் போட்டித் தேர்வு வினாத்தாள்கள் தொடர்ச்சியாகக் கசிந்த விவகாரங்களைச் சுட்டிக்காட்டிய அவர், நாடு முழுவதும் இதுவரை நடந்துள்ள 152 வினாத்தாள் கசிவு சம்பவங்களால் சுமார் 7.5 கோடி இளைஞர்களின் எதிர்காலம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தனது வேதனையையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
மேலும், கோடிக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையோடு விளையாடிய இந்த வினாத்தாள் கசிவு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளில் ஒருவர் கூட இதுவரை சட்டப்படி தண்டிக்கப்படவில்லை என்று அவர் மத்திய அரசை விமர்சித்துள்ளார். இந்தத் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் எழுப்பி வரும் கோரிக்கையையும் மத்திய அரசு தொடர்ந்து ஏற்க மறுத்து வருவதாக ராகுல் காந்தி சாடியுள்ளார்.
