LATEST NEWS
BREAKING: தலைமைச் செயலகத்திற்கு வெளியே போராடிய பாப் பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு கைது.. பெரும் பரபரப்பு..!!
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெளியே திடீர் முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்ற பிரபல ராப் பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு , காவல்துறையினரால் குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்டுள்ளார். நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாகவும், தமிழக முதலமைச்சர் விஜய் இதுகுறித்து அவையில் பேச வலியுறுத்தியும் அவர் திடீரென இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தார்.
தலைமைச் செயலகத்தின் பாதுகாப்புப் பகுதிக்குள் நுழைந்து அவர் ஆக்ரோஷமாக முழக்கங்களை எழுப்பியதால், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த 7-க்கும் மேற்பட்ட காவலர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு, வலுக்கட்டாயமாகத் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்தனர். தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கியக் கொடிப் பாடலை எழுதி, இசையமைத்துப் பாடிய பாடகர் அறிவு, தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் சட்டப்பேரவை வளாகத்திற்கு வெளியேயே குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்டுள்ளது அரசியல் மற்றும் கலை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
