LATEST NEWS
FLASH: “சிறைக்கு அஞ்ச மாட்டோம்” கைதான எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை சந்தித்துவிட்டு தவெக அரசை சீறிய கனிமொழி எம்பி..!!
முதலமைச்சர் விஜய்யை அவதூறாக விமர்சித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ள விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு நேரில் சென்று சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி, தவெக அரசின் இந்த அராஜகமான கைது நடவடிக்கைக்குத் தனது கடுமையான கண்டனங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் ஆவேசமாகப் பேசிய கனிமொழி எம்பி, அச்சுறுத்தல், வழக்குகள் மற்றும் கைது நடவடிக்கைகளுக்கு அஞ்சுபவர்கள் யாரும் திமுகவினர் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், இந்த பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை என்பது திமுகவிற்கு ஒன்றும் புதியது கிடையாது என்றும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இருந்த சிறைச்சாலை என்பதால், இந்தச் சிறைக்குள் வருவதைத் திமுகவினர் தங்களுக்குக் கிடைத்த பெருமையாகத் தான் கருதுவார்கள் என்றும் தவெக அரசிற்குத் தனது காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார்.
