LATEST NEWS
“இப்படியுமா பண்ணுவாங்க?.. ஒரே ஒரு Zoom Call… வாழ்க்கை தலைகீழா மாறிடுச்சு… US கம்பெனியின் இரக்கமற்ற செயலால் கதறும் இளம்பெண்.. கொதித்தெழும் நெட்டிசன்கள்”..!!
அமெரிக்காவில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்றில் சமூக ஊடக வளர்ச்சி மேலாளராகப் சேர்ந்த இந்தியப் பெண் ருச்சிகா ஜெயின், வெறும் ஆறு மாதங்களில் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகள், தாத்தாவின் மறைவு மற்றும் உடல்நலக் குறைவு போன்ற சூழல்களிலும் நிறுவனத்திற்காகத் தொடர்ந்து இரவு நேரங்களில் உழைத்த அவருக்கு, 3 மாத தகுதிகாண் காலத்திற்குப் பின் நிரந்தரப் பணி நியமனக் கடிதம் வழங்கப்படும் என வாய்மொழியாக உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இரண்டரை மாத காத்திருப்புக்குப் பிறகு, எந்தவித முன் அறிவிப்போ அல்லது பணி விலகல் அவகாசமோ இன்றி, நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி ஒரே ஒரு ஜூம் அழைப்பின் மூலம் அவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டு, மின்னஞ்சல் கணக்குகளும் உடனடியாக முடக்கப்பட்டன.
https://www.instagram.com/reel/DbBMt1LRoIl/?utm_source=ig_embed&ig_rid=AK7xe62eULkCSuXY_w6SBgo
இந்தக் கொடூரமான பணிநீக்க அனுபவத்திற்குப் பிறகும் மனம்தளராத ருச்சிகா, இதை ஒரு சிறந்த கற்றலாக எடுத்துக்கொண்டதாகக் கூறி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டார். அவருக்கு இணையவாசிகளும் நெட்டிசன்களும் பெருமளவில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அமெரிக்கக் கனவோடு சென்று இரவும் பகலும் உழைத்த ஒருவருக்கு, நிறுவனத்தின் வாய்மொழி வாக்குறுதிகள் ஏமாற்றமாக முடிந்து, ஒரே அழைப்பில் வேலை பறிபோன இந்தச் சம்பவம், கார்ப்பரேட் உலகின் கொடூரமான நிதர்சனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
