DISTRICT NEWS
குழந்தை உணவில் இப்படியா..? அங்கன்வாடி முட்டையை உடைத்த பெற்றோர் அதிர்ச்சி..! உள்ளே இருந்தது என்ன தெரியுமா..?!
தூத்துக்குடி மாவட்டம் புதூர் அருகே உள்ள ரெகுராமபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் சுமார் 20 குழந்தைகள் பயின்று வருகின்றனர். அங்கு 1 முதல் 2 வயதுடைய குழந்தைகளுக்கு வாரத்திற்கு மூன்று முட்டைகள் வீதம் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த 20-ம் தேதி ஒரு குழந்தைக்கு வழங்கப்பட்ட முட்டைகளை பெற்றோர் வீட்டிற்கு எடுத்துச் சென்று வேகவைத்து உடைத்துப் பார்த்தபோது, அதற்குள் இறந்து அழுகிய நிலையில் கோழிக்குஞ்சு ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனால் பதறிப்போன பெற்றோர், அந்த முட்டையை உடனடியாக அங்கன்வாடி மையத்திற்கு எடுத்துச் சென்று ஊழியரிடம் காட்டி முறையிட்டனர். ஆனால், அங்குப் பணியாற்றும் ஊழியர் இதற்குக் திருப்திகரமான உரிய விளக்கம் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்துத் தகவல் பரவியதைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள மற்ற பெற்றோர்களிடையேயும் பெரும் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சமூக குழந்தைகள் நலத்திட்ட அலுவலர் பத்மா அங்கன்வாடி மையத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும், அந்த முட்டையின் ஓடுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும், அவை அரசு சார்பில் விநியோகிக்கப்பட்டவையா அல்லது வெளியில் இருந்து வாங்கப்பட்டவையா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
