LATEST NEWS
“ச்ச…இதுக்கு பேருதான்யா நிஜமான காதல்..! 180 கி.மீ தோளில் சுமந்து கணவனின் ஆசையை நிறைவேற்றிய மனைவி..! நெஞ்சை நெகிழ வைத்த தம்பதியின் பயணம்..!!”
உத்தரப் பிரதேச மாநிலம் மோடிநகரைச் சேர்ந்த சச்சின் – ஆஷா தம்பதியின் காதல் மற்றும் பக்தி உலகறியச் செய்யும் ஒரு காவியமாகப் பார்க்கப்படுகிறது. தீவிர சிவபக்தரான சச்சின், விபத்து ஒன்றில் சிக்கி முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். முன்னதாக, ஹரித்வார் சென்று கங்கை நீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்த சச்சினின் இந்த நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற அவரது மனைவி ஆஷா துணிந்தார்.
யாருடைய உதவியும் இன்றி, தனது மாற்றுத்திறனாளி கணவனைத் தனது தோள்களிலேயே சுமந்தபடி, உத்தரப் பிரதேசத்திலிருந்து உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வார் வரை உள்ள 180 கிலோமீட்டர் கடினமான நடைப்பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கினார். இந்த நெடிய மற்றும் சவாலான பயணத்தில் தங்களது சிறு குழந்தைகளும் பெற்றோருடன் இணைந்து பயணித்தனர். வழியெங்கும் ஆஷாவின் கணவன் மீதான பாசத்தையும், அவரது அசைக்க முடியாத உறுதியையும் கண்டு வியந்த பொதுமக்கள் பலரும் அவர்களுக்கு உணவும் தண்ணீரும் வழங்கி உற்சாகப்படுத்தினர்.
இறுதியாக, கணவனின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அவரைச் சுமந்து சென்ற ஆஷா, சிவன் கோவிலில் கங்கை நீரை அபிஷேகம் செய்ய வைத்து உலகிற்கு உண்மையான அன்பின் ஆழத்தை நிரூபித்துக் காட்டியுள்ளார். இவர்களின் இந்த உன்னத போராட்டம் சமூக வலைதளங்களில் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
