LATEST NEWS
“ச்சீ.. சீருடை போட்டுக்கிட்டு என்ன வேலை இது..?” போதையில் போலீஸ் ஏஎஸ்ஐ-யின் அருவருப்பான செயல்.. கொந்தளித்த பயணிகள்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் ரயில் நிலையத்தில் பணியில் இருந்த காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர், மதுபோதையில் டிக்கெட் பரிசோதகர் அலுவலகத்திலேயே சிறுநீர் கழித்ததாகக் கூறப்படும் அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் அருவருப்பான செயலை அங்கிருந்த டிக்கெட் பரிசோதகர் தனது கைபேசியில் வீடியோவாகப் பதிவு செய்து, ஜான்சி ரயில்வே கோட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
ग्वालियर रेलवे स्टेशन पर ड्यूटी के दौरान पुलिस ASI की कथित शर्मनाक हरकत का वीडियो वायरल।
आरोप है कि शराब के नशे में एक पुलिस ASI ने रेलवे के टिकट कलेक्टर (TC) ऑफिस में ही पेशाब कर दी। बताया जा रहा है कि घटना का वीडियो वहां मौजूद TC ने रिकॉर्ड किया और इसकी शिकायत झांसी रेल मंडल… pic.twitter.com/0FGRDuiE4c— Mandeep RajBhar (@MandeepRajBhar9) July 27, 2026
போதையில் இருந்த அந்த போலீஸ் அதிகாரி, தான் அணிந்திருந்த சீருடையின் கண்ணியத்தைப் பொருட்படுத்தாமல் இவ்வாறு நடந்துகொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மக்கள் பாதுகாப்புப் பணியில் இருக்கும் ஒரு காவல் அதிகாரி பொது இடத்தில், அதுவும் அரசு அலுவலகத்திற்குள் இவ்வாறு நடந்து கொண்டது கடுமையான கண்டனங்களை எழுப்பியுள்ளது. இது குறித்து நடுநிலையான விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட ASI மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்களும் நெட்டிசன்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
